கலப்பின ரகங்களின் இனப்பெருக்க முறைமை மாற்றமும், அதன் உபயோகமும்

ஒட்டுப் போடுவதன் மூலமாக, பயிர்களில், நமக்குத் தேவையான பண்பும் குணமும் உள்ள ரகங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது பொது அறிவு; உதாரணமாக, அத்தகைய கலப்பின ரகங்கள், பொதுவாக, நல்ல மகசூல் தருபவையாகவோ, அல்லது, நல்ல புழு மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை உடையவையாகவோ, அல்லது, உயர் ரக பழம் அல்லது பூ தருபவையாகவோ இருக்கும். ஆனால், அத்தகைய, நமக்குத் தேவையும், பிடித்தமுமான இரு கலப்பின ரகங்களை ஒட்டுப்போட்டு, அவற்றை விடவும் உயர்ந்த ரகங்களை, இப்போதைக்கு நம்மால் உருவாக்க முடியாமல் இருந்து வருகிறது.
சமீபத்தில், ஹைதராபாதில் உள்ள செல் மற்றும் மூலக்கூற்றறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த விஞ்ஞானி டா. இம்ரான் சித்திக்கி மற்றும அவரது உடனுறை விஞ்ஞானிகள், கலப்பின ரகங்களின் இந்தக் குறைப்பாட்டை, அவைகளின் (ஜீன்களை மாற்றுவதன் வழியாக) இனப்பெருக்க முறைமையை மாற்றி, கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்திருப்பதாகக் கேள்வி. இன்றைய ஹிண்டு பத்திரிக்கையில, பாலசுப்ரமணியன் அவர்கள் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும், அது சம்பந்தமான நுணுக்கங்களைப் பற்றியும், தெளிவாகவும், விலாவரியாகவும் எழுதி இருக்கிறார் — ஒரு பார்வை பார்த்துவிட்டு வாருங்களேன்.

Advertisements

மார்ச் 20, 2008 at 1:53 முப 1 மறுமொழி

கதிரியக்கமும் காபியும்

1971-ஆம் ஆண்டு, எதிர்பாராத விதமாக, காபியின் கதிரியக்க எதிர்ப்புத் தன்மை குரித்து கண்டறிந்த விஞ்ஞானி கேசவன், இன்றைய ஹிண்டு பத்திரிக்கையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தாளில் தம்முடைய கண்டுபிடிப்பு குறித்து எழுதியிருக்கிரார். அது மட்டும் அல்லாது, காபி நீரிழிவு (2-ஆம் வகை) மற்றும் புற்று நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி அளிக்க வல்லது என்றும் சொல்கிறார்.

இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இந்திய விவசாய விஞ்ஞானி சுவாமிநாதன், கதிரியக்க ஆபத்து உள்ள பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிளாளர்களுக்கென கஃபெயின் அதிக அளவு உள்ள காபிப் பயிரை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பதாகக் கேள்வி.

இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய ஆவல் உள்ளவர்கள், இந்த Current Science கட்டுரையைப் படியுங்கள (pdf)்–படிக்கு முன் ஒரு கோப்பை ஃபில்டர் காபி போட்டுக்கொள்ள ரொம்ப நேரம் ஆகுமா என்ன?

ஏப்ரல் 19, 2007 at 2:44 முப பின்னூட்டமொன்றை இடுக

தலையாட்டி பொம்மையின் கணிதம்

Seed பத்திரிக்கை மூலமாக, தலையாட்டி பொம்மை குரித்த இந்த சுவாரசியமான ஆராய்ச்சி பற்றி்் எனக்குத தெரியவந்தது. ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு கணித ஆய்வாளர்கள், தலையாட்டி பொம்மை அல்லாத மற்ற வடிவங்கள் அதைப் போல் செயல்படுவதைக் காட்டியது மட்டும் அல்லாது, இந்திய தாரகை ஆமை என்ற ஆமை இனம், அப்படிப்பட்ட ஒரு வகை வடிவத்தில் தன் ஓட்டை வடிவமைத்துக்கொள்வதன் மூலம், தலைகீழாக்கினாலும், தன் கால்களை லேசாக உதைத்துத் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்கிறது என்றும் காட்டியிருக்கிறார்கள். அடுத்த முறை எங்கள் ஊர்த் திருவிழாவில் இந்த தலையாட்டி ஆமை கிடைக்குமோ?

ஏப்ரல் 16, 2007 at 3:49 முப பின்னூட்டமொன்றை இடுக

வரவேற்பு

இயல் கண்டு தெளிவோம் என்கிற இந்த இணைய தளத்தில், தமிழில,் என் மனதிர்குகந்த அறிவியல் விஷயங்கள் குரித்துப் பேச வேண்டும் என்பது என் ஆசை.

இப்படிப்பட்ட ஒரு தமிழ்த் தளம் அமைக்க wordpress-ல் ஏதாவது வழி இருக்கிறதா என்று நான் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்த வேளை, நண்பர் அபி இந்த வழிமுறை பற்றி சொல்லவும், அதைப் பயன்படுத்தி இன்றே எழுதத் தொடங்ஙியுள்ளேன். தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட இதை விட நல்ல வழி இருக்கிறதா என்ன?

ஏப்ரல் 15, 2007 at 7:26 முப 2 பின்னூட்டங்கள்


பிரிவுகள்

  • Blogroll

  • Feeds